தவறான காப்பீடு விற்பனை இனி தண்டனைக்குரிய குற்றம் என நிதியமைச்சர் எச்சரிக்கை

தவறான காப்பீடு விற்பனை இனி தண்டனைக்குரிய குற்றம் என நிதியமைச்சர் எச்சரிக்கை

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லாத காப்பீட்டுத் திட்டங்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்களை ஏமாற்றி காப்பீடு விற்றால் அந்தத் தொகையை வங்கிகள் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.

வங்கிகள் தங்களின் அடிப்படைப் பணிகளான சேமிப்பு மற்றும் கடன் வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறான விற்பனை முறைகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் காப்பீடு என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் சுரண்டப்படுவது தடுக்கப்பட்டு, வங்கித் துறையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *