தலைமுடி உதிர்வைத் தடுத்து, விரைவாக வளர வைக்கும் முருங்கைக்கீரை: சாறு, பொடி— எது சிறந்தது?

தலைமுடி உதிர்வைத் தடுத்து, விரைவாக வளர வைக்கும் முருங்கைக்கீரை: சாறு, பொடி— எது சிறந்தது?

மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றங்களால் தலைமுடி உதிர்வுப் பிரச்சனை இன்று பலருக்கும் உள்ளது. முடிப் பராமரிப்புக்காக ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முருங்கையைப் (Moringa) பயன்படுத்த அழகுக்கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முருங்கையில் வைட்டமின் ஏ, சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், இரும்புச்சத்து, மற்றும் பூஞ்சை எதிர்ப்பு (antifungal), அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) கூறுகள் உள்ளன, இவை முடி வேர்களை வலுப்படுத்தி, விரைவான வளர்ச்சிக்கு உதவுகின்றன.

முருங்கை இலையை அரைத்துச் சாறாகக் குடிப்பது அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. ஆனால், நேரமில்லாதவர்கள் இலையை உலர்த்திப் பொடி செய்து, வெந்நீர், ஸ்மூதி அல்லது டீயில் கலந்து குடிக்கலாம். முருங்கையின் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *