தமிழக புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்
March 14, 2026

தமிழக டிஜிபி நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது முடித்து வைத்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே தகுதியான அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் வரும் மார்ச் 20ஆம் தேதி தேர்வுக் குழு கூடி புதிய டிஜிபியை இறுதி செய்யும் என யுபிஎஸ்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இந்த தகவலைப் பதிவு செய்துகொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது. விரைவில் தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி கிடைக்க வாய்ப்புள்ளது.