தமிழக தேர்தல் களம் அதிரும் வகையில் வெளியானது ஐஏஎன்எஸ் மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்

தமிழக தேர்தல் களம் அதிரும் வகையில் வெளியானது ஐஏஎன்எஸ் மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என ஐஏஎன்எஸ்-மேட்ரைஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணி 114 முதல் 127 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ள நிலையில், திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களை மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 இடங்களை வென்று மூன்றாவது சக்தியாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை அதிமுக 40 சதவீதம் வரை பெற்று முதலிடத்திலும், திமுக 38 சதவீதம் வரை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் 15 சதவீத வாக்குகளைப் பிரிப்பது திமுகவின் வெற்றியைப் பாதித்து அதிமுகவுக்குச் சாதகமாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *