தமிழக அரசியலில் கனிமொழி ரீ-என்ட்ரி கொடுக்க மக்கள் விருப்பம்
March 14, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் லயோலா முன்னாள் மாணவர்களின் ஐபிடிஎஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் திமுக எம்பி கனிமொழி மாநில அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசிய அரசியலை விட அவர் தமிழக அரசியலில் ஈடுபடுவதையே பெரும்பான்மையான வாக்காளர்கள் விரும்புகின்றனர்.
அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு இடையே வாக்கு சதவீதத்தில் சிறிய இடைவெளியே உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வரவிருக்கும் தேர்தலில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.