தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக மெகா பிளான்

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அக்கட்சிக்கு 80 இடங்களை ஒதுக்குவதுடன், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் பாஜக மேலிடம் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக இல்லாத கூட்டணியில் விஜய்யின் மக்கள் செல்வாக்கை அறுவடை செய்ய பாஜக இந்த மாஸ்டர் பிளானை வகுத்துள்ளது. விஜய்யின் மாநாடுகளில் கூடும் வரலாறு காணாத கூட்டத்தை கருத்தில் கொண்டே இந்த அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜகவின் இந்த மெகா கூட்டணி மற்றும் பதவி குறித்த அறிவிப்பு தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.