தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

சர்வதேச போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வணிக ரீதியான சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். சிலிண்டர் விலை உயர்வு மற்றும் விநியோக தாமதத்தை சீர்செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்பு நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *