தமிழகத்தில் சதமடித்த வெயில் இனி வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்குமா

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. குறிப்பாக கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் வறண்ட வானிலையே நீடிக்கும்.
மார்ச் 30 ஆம் தேதி வரை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாது. வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழையின்றி வறண்ட சூழலே நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.