தமிழகத்தின் சிறந்த முதல்வர் – AI-யின் பதில் ஆச்சரியம்!

எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “க்ரோக் AI” என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட், தமிழகத்தின் சிறந்த முதல்வர் தொடர்பாக அளித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு பயனர், “கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தின் சிறந்த முதலமைச்சர் யார்?” என்று கேள்வி எழுப்பியபோது, க்ரோக் AI, “மு. கருணாநிதி” என்று பதிலளித்துள்ளது. கருணாநிதி 19 ஆண்டுகள், 5 முறை தமிழக முதல்வராக இருந்ததுடன், சமூக நீதி, கல்வி வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பெரிய பங்கை வகித்ததை குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் நல்லாட்சித் திட்டங்கள், எம்.ஜி.ஆர்-ன் மக்கள் செல்வாக்கு, அண்ணாதுரையின் திராவிட இயக்க பங்களிப்பு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்றுகூட AI தெரிவித்துள்ளது.
க்ரோக் AI தனது பதிலில், “சிறந்த முதல்வர் என்பது சப்ஜெக்டிவ் (மனிதரின் பார்வை சார்ந்தது), ஆனால் கருணாநிதி சிறந்த தேர்வாக தெரிகிறார்” என்று கூறியுள்ளது. இந்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், பலரிடம் ஆச்சரியத்தையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.