தனது உள்ளுணர்வால் மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டு வரப்போகும் டொனால்ட் டிரம்ப்

தனது உள்ளுணர்வால் மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டு வரப்போகும் டொனால்ட் டிரம்ப்

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த ரகசியத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடைத்துள்ளார். போரை நிறுத்த சரியான தருணத்தை தனது உள்ளுணர்வு எப்போது உணர்த்துகிறதோ, அப்போது இறுதி முடிவை எடுக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையிலேயே இந்த முக்கிய நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைதி பற்றிப் பேசினாலும் அதே வேளையில் மத்திய கிழக்கில் ராணுவ பலத்தை அதிகரிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 2,500 கடற்படை வீரர்கள் மற்றும் மூன்று போர்க்கப்பல்கள் அங்கு அனுப்பப்படுகின்றன. போர் நிறுத்தம் பற்றிப் பேசிக்கொண்டே ராணுவத்தை வலுப்படுத்தும் டிரம்பின் இந்த இரட்டை நிலைப்பாடு உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *