தந்தை செய்த கொடூர செயல் மூன்று மகள்கள் பலி தப்பிய இரு சிறுவர்கள்

தந்தை செய்த கொடூர செயல் மூன்று மகள்கள் பலி தப்பிய இரு சிறுவர்கள்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரோலியா கிராமத்தில் தந்தை ஒருவர் தனது ஐந்து குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அமர்நாத் ராம் என்ற நபர் தனது மூன்று மகள்களை முதலில் தூக்கிலிட்டார், பின்னர் தனது இரு மகன்களையும் தூக்கிலிட முயன்றார். அதிர்ஷ்டவசமாக சிறுவர்களின் கால்கள் கீழே இருந்த பெட்டி மீது பட்டதால் அவர்கள் உயிர் தப்பினர்.

இந்த கோர விபத்தில் தந்தை மற்றும் மூன்று மகள்கள் உயிரிழந்தனர், தப்பிய இரு சிறுவர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி இறந்ததில் இருந்தே அமர்நாத் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்கொலையா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் மூடநம்பிக்கை காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *