தந்தையை கொன்ற தாய்க்கு எதிராக 9 வயது மகன் சாட்சி நீதிமன்றம் வழங்கிய அதிரடி ஆயுள் தண்டனை

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான கொலை வழக்கில் நீதிமன்றம் தற்போது இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி லதேஷ் மற்றும் அவரது காதலன் சந்தீப் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பிரதிபா சக்சேனா உத்தரவிட்டார். இந்த வழக்கில் உயிரிழந்தவரின் ஒன்பது வயது மகன் அளித்த சாட்சியம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த மிக முக்கிய ஆதாரமாக அமைந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்து மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் ரவீந்திரா என்பவர் அவரது மனைவியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். தனது தந்தை கொல்லப்பட்டதை நேரில் பார்த்த சிறுவன், நீதிமன்றத்தில் தாய்க்கு எதிராக துணிச்சலாக வாக்குமூலம் அளித்தான். இதன் அடிப்படையில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.