தஞ்சை பூண்டி மாதா பேராலயத்தில் திருச்சிலுவை அருளிக்க திருப்பயணம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது
March 28, 2026

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியிலிருந்து நேற்று மாலை தொடங்கிய புனித திருச்சிலுவை அருளிக்க திருப்பயணத்தை குடந்தை மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் முன்னின்று துவக்கி வைத்தார். இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் நூற்றுக்கணக்கான இறை மக்கள் பாடல்களைப் பாடியபடி திருக்காட்டுப்பள்ளி வழியாகப் பேரணியாகச் சென்று பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தனர்.
பேராலயத்தை அடைந்ததும் ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் சிலுவைப்பாதை நிகழ்வுகள் பக்திப்பூர்வமாக நடைபெற்றன. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கடைபிடிக்கப்படும் இந்த தவக்காலத்தின் ஆறாம் வெள்ளியன்று, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புனிதப் பயணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.