தஞ்சை கைவினை கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி
March 16, 2026

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மற்றும் வீணை தயாரிக்கும் கலைஞர்களை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். கலைஞர்களுக்கு அடையாள அட்டை, ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்த அமைச்சர், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைந்ததும் கைவினை கலைஞர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும், இதுகுறித்த அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.