தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
February 23, 2026

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை வாங்குவதே விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உள்நாட்டுத் தேவையை அரசு கண்காணித்து வருவதாகவும், தற்போதைய சூழல் கவலைப்படும் வகையில் இல்லை என்றும் அவர் பட்ஜெட்டுக்குப் பிந்தைய கூட்டத்தில் கூறினார்.
இறக்குமதியைச் சார்ந்திருத்தல் மற்றும் திருமண சீசன் தேவைகள் விலையை பாதிக்கின்றன. அமெரிக்கா – ஈரான் பதற்றம் மற்றும் உலகளாவிய வரி மாற்றங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.