தங்கக் கடத்தல்: அகமதாபாத்தில் ₹100 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
March 19, 2025

குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு பூட்டிய வீட்டில் தங்கக் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது, அதில் 87.9 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 19.6 கிலோ தங்க நகைகள் இருந்தது. இப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ₹100 கோடியாக மதிப்பிடப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைப் பற்றி மேலும் விசாரணை செய்யும் போது, அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த மேக் ஷா என்ற நபர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. அவர் தற்போது தப்பியோடிச் சென்றுள்ளார், அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.