டோல் பிளாசாவில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை செயற்கை நுண்ணறிவு மூலம் சுங்கக் கட்டணம் வசூல்
December 18, 2025

வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இந்த புதிய முறையினால் வாகனங்கள் டோல் பிளாசாக்களில் நிற்காமல் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும்.
செயற்கைக்கோள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வாகன எண்களைக் கண்டறிந்து தானாகவே கட்டணம் கழிக்கப்படும். இதன் மூலம் சுமார் 1,500 கோடி ரூபாய் எரிபொருள் மிச்சமாகும் என்றும், அரசின் வருவாய் 6,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.