டேவிட் பெக்கமின் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்து மான்செஸ்டர் யுனைடெட்டில் புதிய வரலாறு படைத்தார் புரூனோ பெர்னாண்டஸ்
March 16, 2026

ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் கேப்டன் புரூனோ பெர்னாண்டஸ் அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1999/2000 சீசனில் டேவிட் பெக்கமின் 15 அசிஸ்ட் சாதனையை முறியடித்து, நடப்பு 2025/26 சீசனில் 16 அசிஸ்ட்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் யுனைடெட் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தச் சாதனையுடன் பிரீமியர் லீக் வரலாற்றில் 100 அசிஸ்ட்களைச் செய்த மூன்றாவது மான்செஸ்டர் யுனைடெட் வீரர் என்ற பெருமையையும் புரூனோ பெற்றுள்ளார். ஆட்டத்தின் முதல் இரண்டு கோல்களுக்கு உதவிய அவர், தனது அபாரமான ஆட்டத்திறனால் கால்பந்து உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார்.