டெல்லி வான்வெளியில் பறக்கும் டாக்ஸி: போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

டெல்லி வான்வெளியில் பறக்கும் டாக்ஸி: போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

பெங்களூரு மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குருகிராம், கன்னாட் பிளேஸ் மற்றும் நொய்டாவின் ஜேவார் சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் வகையில் ‘பைலட் காரிடார்’ (Pilot Corridor) தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்தால், வான்வழி டாக்ஸி (Air Taxi) சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும். இந்தச் சேவை மருத்துவமனைகள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் தொழில்பேட்டைகளுக்குச் செல்பவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்தியாவில் ‘ஏர் மொபிலிட்டி’ (Air Mobility) தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இந்த ஏர் டாக்ஸி சேவை பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *