டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்

கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இன்று மூன்றாவது முறையாக நடிகர் விஜய் ஆஜராகிறார். ஏற்கனவே இருமுறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.

கடந்த 10ஆம் தேதி ஆஜராக வேண்டியிருந்த நிலையில், கட்சிப் பணிகள் காரணமாக விஜய் கால அவகாசம் கோரியிருந்தார். இதனை ஏற்று சிபிஐ இன்று ஆஜராக சம்மன் அனுப்பியது. இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி சென்றடைந்த விஜய், இன்று அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார். உயிரிழப்புகளுக்குக் காரணமான கூட்ட நெரிசல் குறித்து முக்கிய தகவல்கள் இந்த விசாரணையில் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *