டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் அதிரடி விசாரணை மற்றும் இரண்டு நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் அதிரடி விசாரணை மற்றும் இரண்டு நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகிறார். ஏற்கனவே அவர் கோரிய கால அவகாசத்தை நிராகரித்த சிபிஐ, அவரை நேரில் ஆஜராகக் கண்டிப்புடன் உத்தரவிட்டது. இதற்காக அவர் நேற்று தனி விமானம் மூலம் சென்னைலிருந்து டெல்லி சென்றடைந்தார்.

தற்போதுள்ள தகவல்படி இந்த விசாரணை நாளை திங்கட்கிழமையும் தொடர வாய்ப்புள்ளது. இரண்டு நாட்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளுடன் வருமாறு சிபிஐ தரப்பு விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய்யிடம் நடத்தப்படும் இந்தத் தொடர் விசாரணை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *