டிராகன் vs NEEK: ஓடிடி போரில் வெற்றி யாருக்கு?
March 19, 2025

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் மற்றும் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், டிராகன் படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், NEEK படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
தற்போது, இரு படங்களும் ஓடிடி தளங்களில் ஒரே நாளில் வெளியாக உள்ளன. மார்ச் 21ஆம் தேதி டிராகன் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் அதே நாளில் NEEK படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்கில் ஏற்பட்ட போட்டி, ஓடிடி தளத்திலும் தொடர உள்ளது. ரசிகர்கள் எந்தப் படத்திற்குத் துணை நிற்பார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்குப் பிடித்த படம் எது?