டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் மீறி உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது ஈரான்
March 16, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த பாதுகாப்பு தொடர்பான மறைமுக எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், வரவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் தேசிய அணி முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இப்போட்டிகளில் ஈரான் விளையாடுவதை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், அந்நாட்டு வீரர்களின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் ஈரான் மகளிர் அணி எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும், ஆண்கள் அணி சர்வதேச அரங்கில் கால்பதிக்கத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.