டிரம்ப் ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் அத்துமீற முயன்ற இளைஞர் சுட்டுக்கொலை
February 23, 2026

புளோரிடாவிலுள்ள டொனால்ட் டிரம்பின் சொகுசு விடுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கி மற்றும் எரிபொருளுடன் நுழைய முயன்ற 20 வயது இளைஞர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். வட கரோலினாவைச் சேர்ந்த ஆஸ்டின் டி மார்ட்டின் என்ற அந்த இளைஞர், அதிகாரிகளைத் தாக்க முயன்றபோது இந்த தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது டிரம்ப் அந்த விடுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த அந்த இளைஞர், எதற்காக இந்த அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.