டிரம்ப் முடிவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை இந்திய பொருட்களின் விலை குறையுமா அல்லது உயருமா

டிரம்ப் முடிவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை இந்திய பொருட்களின் விலை குறையுமா அல்லது உயருமா

செய்தி பிரிவு : இந்திய பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மீதான வரிச் சுமை 18 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது, இது ஏற்றுமதி தொழிலை நம்பியுள்ள சாதாரண மக்களுக்கும் வணிகர்களுக்கும் பெரிய நிம்மதியைத் தரும். வரி குறைந்தால் சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பிற்கு பதிலடியாக, பிப்ரவரி 24 முதல் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத புதிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சட்டப் போராட்டத்தால் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடி மாற்றங்கள் இந்திய நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *