டிரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்
March 10, 2026

அதிபர் டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே ஈரானின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலால் அப்பகுதியே போர்க்களமாக மாறியதுடன் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் ஹைஃபா நகர் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழுமையான போர் சூழலை உருவாக்கி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.