டிரம்ப்பின் புதிய உத்தரவால் சிக்கலில் H-1B விசா வைத்திருப்பவர்கள்; மெட்டா, மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு அவசர அழைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் புதிய உத்தரவு, H-1B விசா கட்டணத்தை $1,00,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுக்குப் பிறகு, மெட்டா மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு அவசர அறிவிப்பை அனுப்பி, உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
டிரம்ப்பின் இந்த உத்தரவு செப்டம்பர் 21 முதல் 12 மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும். இந்த அறிவிப்பால், மெட்டா மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள், வெளிநாட்டில் இருக்கும் தங்களின் H-1B மற்றும் H-4 விசா வைத்திருக்கும் ஊழியர்களை 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளன. இதேபோல், அமேசான் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை இப்போதைக்கு அமெரிக்காவிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை புதிய விதிகளால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அமெரிக்கா திரும்புவதில் ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறிக்கிறது.