டிரம்பின் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 23 நாடுகள்; போதைப்பொருள் கடத்தலுக்கு கடும் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட 23 நாடுகளை சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் முக்கிய மையங்களாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இந்த நாடுகள் ஒரு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் காங்கிரஸ் முன் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலுக்கு வழிவகுக்கும் புவியியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் இந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தத் தவறும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இருப்பினும், பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவில்லை என்று அர்த்தம் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு விவகாரத்தில் டிரம்பின் உறுதியான நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.