டிஜிட்டல் வங்கிப் புதிய விதிகள்: RBI-ன் 7 புதிய உத்தரவுகள் ஜனவரி 1 முதல் அமல்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் மோசடிகளும் உயர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கி (RBI) டிஜிட்டல் வங்கிச் சேவைகளை இன்னும் பாதுகாப்பானதாகவும், எளிதாகவும் மாற்றும் வகையில் 7 புதிய முதன்மை வழிகாட்டுதல்களை (Master Directions) வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பெரிய வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளிலும் அமலுக்கு வரவுள்ளன.
இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வங்கி நடைமுறைகளைத் தெளிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாகும். இந்த புதிய வழிகாட்டுதல்கள், டிஜிட்டல் வங்கி தொடர்பான விதிகளைப் புரிந்துகொள்வதையும், செயல்படுத்துவதையும் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எளிதாக்கும். ஒவ்வொரு வங்கியும் இணையம் மற்றும் மொபைல் பேங்கிங்கில் வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பது எப்படி என்று விளக்கும் தனி டிஜிட்டல் வங்கி கொள்கையை உருவாக்க வேண்டும்.