டாடா குரூப் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் வெறும் 5 நாட்களில் 18 சதவீத உயர்வு
February 22, 2026

செய்தி பிரிவு : டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் பங்குகள் தற்போது அசுர வேகத்தில் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் இந்த பங்கின் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. என். சந்திரசேகரன் மீண்டும் டாடா சன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்கக்கூடும் என்ற செய்தியே இந்த அதிரடி உயர்வுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சந்தை வல்லுநர்களின் கணிப்புப்படி, இந்த பங்கின் விலை விரைவில் 830 முதல் 850 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 569 சதவீத லாபத்தை அளித்து சாதாரண மக்களின் சேமிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இருப்பினும், பங்குச் சந்தை முதலீடுகள் அபாயத்திற்கு உட்பட்டவை என்பதால், முதலீடு செய்யும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.