ஜென் ஜி-யை விட மில்லினியல்கள் அதிக புத்திசாலிகள், ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

செய்தி பிரிவு : அடுத்த தலைமுறை எப்போதும் புத்திசாலியாக இருக்கும் என்று நாம் நினைப்பதுண்டு, ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதை மறுக்கிறது. ஜென் ஜி தலைமுறையை விட மில்லினியல்கள் அதிக அறிவுத்திறன் கொண்டவர்கள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமான தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் திரையைப் பார்க்கும் நேரம் அதிகரிப்பது இளைஞர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது வருங்கால சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜாரெட் கூனி ஹார்வத் கூறுகையில், 2010-க்குப் பிறகு டிஜிட்டல் கருவிகளின் வருகையால் மாணவர்களின் ஐக்யூ மற்றும் கவனிக்கும் திறன் குறைந்துள்ளது. மனித மூளை இயற்கையாகவே நேரடி உரையாடல் மூலம் கற்க வடிவமைக்கப்பட்டுள்ளது, திரைகள் மூலம் அல்ல. தொழில்நுட்பம் தகவல்களை வழங்கினாலும், ஆழமான புரிதலைக் குறைக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், வரும் தலைமுறையினரின் முடிவெடுக்கும் திறன் மற்றும் புத்திசாலித்தனம் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது.