ஜி7 உச்சிமாநாடு மற்றும் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இந்த கோடையில் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இந்த கோடையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். மே மாத மத்தியில் நார்வேயில் நடைபெறும் ‘இந்தியா நார்டிக்’ உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இத்தாலி நாட்டிற்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாத பாதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள ஜி7 கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உலக நாடுகளின் தலைவர்களுடன் முக்கியமான விவாதங்களில் ஈடுபட உள்ள இந்த பயணம், சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதாக அமையும். நார்டிக் நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறையில் புதிய ஒத்துழைப்பை இந்த பயணங்கள் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.