ஜாதகம் பொருந்தவில்லை எனக் கூறி திருமணத்தை மறுப்பது இனி தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

ஜாதகம் பொருந்தவில்லை எனக் கூறி திருமணத்தை மறுப்பது இனி தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

திருமணம் செய்வதாக வாக்களித்து உடலுறவு கொண்ட பிறகு, ஜாதகம் பொருந்தவில்லை என்ற காரணத்தைக் கூறி பின்வாங்குவது குற்றமாகும். எட்டு ஆண்டுகால உறவிற்குப் பின் இவ்வாறு ஜாதகத்தைக் காரணம் காட்டுவது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 69-ன் கீழ் ‘ஏமாற்று வேலை’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் திருமண உறுதி அளித்தே உறவு கொண்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி ஸ்வரண காந்த சர்மா, அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். குடும்பத்தினர் ஜாதகத்தைப் பார்ப்பார்கள் என்று தெரிந்தும் பொய் வாக்குறுதி அளிப்பது சட்டப்படி குற்றமாகும். ஏமாற்றும் நோக்கில் உடலுறவு கொள்வதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *