ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அதிரவைத்த வடகொரியாவின் 10 ஏவுகணை சோதனை
March 15, 2026

பியாங்யாங்கிற்கு அருகிலிருந்து வடகொரியா ஏவிய 10 ஏவுகணைகள் 350 கி.மீ தூரம் கடந்து கிழக்குக் கடலில் விழுந்தன. இது தென்கொரிய எல்லை மற்றும் ஜப்பானின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு மிக அருகில் விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான இந்த ஏவுகணை வீச்சு அண்டை நாடுகளை கொதிப்படையச் செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ‘Freedom Shield’ கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகைக்கு பதிலடியாகவே அதிபர் கிம் ஜாங் உன் இந்த சோதனையை நடத்தியதாகக் கருதப்படுகிறது. இந்த ஒத்திகையைத் தங்கள் மீதான படையெடுப்பாக வடகொரியா கருதுவதால், கிழக்கு ஆசியப் பகுதியில் ராணுவ ரீதியிலான மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.