ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவிய ஏவுகணைகளால் ஆசியாவில் போர் பதற்றம்
March 14, 2026

வடகொரியா இன்று மதியம் 1.30 மணியளவில் ஜப்பான் கடல் பகுதியை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது. ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகே விழுந்த இந்த ஏவுகணைகளால் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தென் கொரிய ராணுவமும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, நிலைமையைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்போது பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.