சௌமியா உடலில் ஆவி புகுந்துவிட்டதா மாமல்லபுரம் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலகலப்பு
March 11, 2026

மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக மகளிர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த 108 நாட்களில் தனது மனைவி சௌமியாவின் அரசியல் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதீத மாற்றத்தைக் கண்டு வியந்து பேசினார். சௌமியா பொதுமக்களுடன் காட்டும் நெருக்கத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்து, அவர் உடலில் ஏதோ ஆவி புகுந்துவிட்டது என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம், திமுக அரசு தனது குடும்பத்திலும் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை உண்டாக்குவதாக அவர் வேதனை தெரிவித்தார். பெண்களுக்கான உரிமைத் தொகை மற்றும் டாஸ்மாக் விவகாரங்களில் சௌமியா எடுத்து வரும் தீவிர பிரச்சாரங்களை சுட்டிக்காட்டிய அன்புமணி, வரும் தேர்தலில் திமுகவிற்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தைக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.