சைவ உணவால் 5 வகை புற்றுநோய் அபாயம் குறையும் அதிரடி ஆய்வுத் தகவல்

சைவ உணவால் 5 வகை புற்றுநோய் அபாயம் குறையும் அதிரடி ஆய்வுத் தகவல்

சைவ உணவு உண்பவர்களுக்கு கணையம், மார்பகம் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட 5 வகையான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் நடத்திய ஆய்வில், இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவுப் பிரியர்களுக்கு கணையப் புற்றுநோய் அபாயம் 21 சதவீதம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்த்து முழு தானியங்கள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ளுமாறு ஆய்வாளர் டிம் கீ பரிந்துரைக்கிறார். இந்த உணவுமுறை மாற்றங்கள் சிறுநீரக புற்றுநோய் அபாயத்தை 28 சதவீதமும், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 12 சதவீதமும் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகள் நிறைந்த சீரான உணவுப் பழக்கமே சிறந்தது என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *