சைக்கிள் சின்னம் இல்லை தாமரை சின்னத்தில் ஜி கே வாசன் போட்டி

சைக்கிள் சின்னம் இல்லை தாமரை சின்னத்தில் ஜி கே வாசன் போட்டி

சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படாததால் வரும் தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாகத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தேசிய அளவில் பாஜகவுடன் நேரடி கூட்டணியில் இருப்பதாலும், இரட்டை இன்ஜின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் விளக்கமளித்தார். தேர்தல் நேரத்தில் இத்தகைய மாற்றங்கள் இயல்பானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அவர், காமராஜரின் ஆன்மா தற்போதைய காங்கிரஸை மன்னிக்காது என்றார். அவசரநிலைக் காலத்தில் காமராஜர் பட்ட துயரங்களை மறந்த காங்கிரஸ், இன்று யாருடன் கூட்டணி வைத்துள்ளது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என வாசன் வலியுறுத்தினார். அரசியல் சூழல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காகவே இந்தச் சின்ன மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *