சேலம் கோட்டையில் சீறிய திண்டுக்கல் லியோனி மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரீஸர் பாக்ஸ் பார்சல் அனுப்பும் எச்சரிக்கை

சேலம் கோட்டை மைதானத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குப் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி வெறும் கதைகளை மட்டுமே கூறி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் நெருங்குவதால் பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவதாகவும், திமுகவின் வெற்றி உறுதியானதால் பாஜகவும் அதிமுகவும் கலக்கத்தில் இருப்பதாகவும் லியோனி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை டப்பா என்ஜின் என்று விமர்சித்த அவர், தோல்வி பயத்தால் பழனிசாமி டெல்லிக்கு ஓடுவதாகக் கேலி செய்தார். மேலும், எடப்பாடியின் தற்போதைய அரசியல் போக்கைப் பார்த்தால் அவர் வீட்டுக்கே இரண்டு பிரீஸர் பாக்ஸ் அனுப்ப வேண்டிய நிலை வரும் என்று கிண்டலாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.