சென்னை கடற்கரையில் சீறியெழுந்த ராட்சத அலையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்

சென்னை கானத்தூர் அருகே முத்தண்டி நயினார் குப்பம் கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற தனியார் ஐடி நிறுவன ஊழியர்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கினர். சக நண்பர்களுடன் கடலில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி மகாராஷ்டிராவைச் சேர்ந்த மயூரி மற்றும் ஜெய் ஆகிய இருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். மயூரி மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலில் காணாமல் போன ஜெயை தேடும் பணியில் கானத்தூர் காவல்துறையினரும் உள்ளூர் மீனவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய பொழுதுபோக்கு பயணம் இப்படி ஒரு துயரமான முடிவைச் சந்தித்தது சக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.