சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணியால் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு
February 23, 2026

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை மூன்றாவது நாளாக இன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான நடைமேடைகளுக்கு பதிலாக 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில்கள் தற்போது 40 நிமிடங்கள் வரை தாமதமாவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ஊழியர்களை தெற்கு ரயில்வே நியமித்துள்ள போதிலும், ரயில் ரத்து மற்றும் தாமதத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.