சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை படுகாயம்
March 16, 2026

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அவசர மகப்பேறு மருத்துவமனையில் தனலட்சுமி என்பவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் வெப்பநிலையை பராமரிக்க மருத்துவர்கள் அதனை ‘ரேடியன்ட் வார்மர்’ கருவியில் வைத்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவால் வார்மர் பெட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் குழந்தையின் முதுகு மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பராமரிப்பு குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வேப்பேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.