சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் குழாய் வழி எரிவாயு
March 16, 2026

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) வழங்கும் திட்டம் வேகமெடுத்துள்ளது. சிலிண்டர் பதுக்கல் மற்றும் விநியோக தாமதங்களுக்கு தீர்வாக அமையும் இத்திட்டத்தை அதானி மற்றும் டொரண்ட் கேஸ் போன்ற நிறுவனங்கள் இந்திய பெட்ரோலிய வாரியத்தின் அனுமதியுடன் செயல்படுத்தி வருகின்றன.
தற்போது வட சென்னை, தென் சென்னை மற்றும் மேற்கு சென்னையின் முக்கிய பகுதிகளில் இந்த இணைப்பு வசதி கிடைக்கிறது. வீட்டு உரிமையாளர்கள் மட்டுமின்றி வாடகைதாரர்களும் தடையில்லா சான்றிதழ் மூலம் விண்ணப்பிக்கலாம். இது சிலிண்டரை விட பாதுகாப்பானது மற்றும் சுமார் 20 சதவீதம் வரை செலவு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.