செங்கோட்டையில் நேதாஜியின் வரலாற்றுத் தொப்பி மாயமா உண்மை பின்னணி என்ன

செங்கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாற்று சிறப்புமிக்க தொப்பி காணாமல் போனதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரை மறுத்துள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, கண்காட்சிக்காக தற்காலிகமாக போர்ட் பிளேயருக்கு கொண்டு செல்லப்பட்ட தொப்பி தற்போது பாதுகாப்பாக மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொப்பியின் உண்மைத்தன்மை குறித்து நேதாஜியின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்து உயர்மட்ட நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த வரலாற்றுச் சின்னத்தின் பாதுகாப்பு மற்றும் அசல் தன்மை குறித்த சர்ச்சை தற்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.