சூர்யகுமார் ஃபார்ம் அவுட்! 18 போட்டிகளில் மோசமான செயல்பாடு; டி20 உலகக் கோப்பையில் நிலைக்க முடியுமா?

சூர்யகுமார் ஃபார்ம் அவுட்! 18 போட்டிகளில் மோசமான செயல்பாடு; டி20 உலகக் கோப்பையில் நிலைக்க முடியுமா?

2026 T20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் தொடர்ச்சியான மோசமான ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாக்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியிலும் அவர் வெறும் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தார். இந்த வருடத்தில் அவர் ஆடிய 18 T20 போட்டிகளில் அவர் காட்டிய மோசமான செயல்பாடு, அவரது கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல், அணியில் அவரது இடத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த ஆண்டு 18 T20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் வெறும் 193 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 15.07 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 126. அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. சொந்த மண்ணில் களமிறங்கவுள்ள இந்திய அணி கோப்பையைத் தக்கவைக்க முயற்சிக்கும் நிலையில், ஒரு வருடத்தில் ஒரு இந்திய கேப்டனின் மிகக் குறைந்த T20I சராசரியை சூர்யகுமார் பெற்றுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *