சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் அதிரடி

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். சுய விளம்பரத்திற்காக மாபெரும் ஆளுமையை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என்றும், இதற்காக ஆதவ் அர்ஜுனா ரஜினி ரசிகர்களிடமும் ரஜினிகாந்திடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் எழுந்துள்ள இந்த விவகாரம் ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கட்சி நிர்வாகிகள் கண்ணியத்துடன் செயல்படுவதை தவெக தலைவர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்த மோதல் குறித்து தவெக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *