சுனிதா வில்லியம்ஸ் வீடு திரும்பினார்: பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பாதுகாப்பான பத்திரமான வீடு திரும்புதலை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூச் வில்மோர் (Butch Wilmore) பூமிக்குத் திரும்பியதை ஒட்டி பிரதமர் மோடி தமது ‘X’ கணக்கில் வாழ்த்து தெரிவித்தார்.
“வீடு திரும்பியதற்காக வாழ்த்துகள் Crew9! பூமி உங்களை மிஸ் செய்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Crew9 குழுவினரின் தைரியம், மன உறுதி மற்றும் மனித நேயம் அனைவரையும் கவரும்,” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், “விண்வெளி ஆராய்ச்சி என்பது மனிதர்களின் திறனை வளர்த்தல், கனவுகளை உண்மையாக்க வேண்டும் என்ற தைரியம் கொண்டிருப்பதே,” என மோடி தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்ஸ் தமது வாழ்க்கை முழுவதும் இந்தப் பண்புகளை வெளிப்படுத்திய trailblazer (முன்னோடி) என்று பாராட்டிய மோடி, “அவர்களை பாதுகாப்பாக வீடு திருப்பிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பெருமை. துல்லியத்திற்கும், ஆர்வத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஒருங்கிணைவு ஏற்படும் போது எதைச் சாதிக்க முடியும் என்பதற்கான உதாரணம் அவர்களின் சாதனை,” என்று பாராட்டினார்.