சீனக் கரையில் குவியும் ரஷ்ய எண்ணெய் இந்தியாவின் இறக்குமதி குறைந்ததால் புதிய திருப்பம்
December 18, 2025

அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளால் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதைக் குறைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் சீனக் கரையில் குவிந்து வருகிறது. கெப்லர் தரவுகளின்படி, தற்போது சுமார் 34 லட்சம் பேரல் யூரல்ஸ் ரக எண்ணெய் ஏற்றப்பட்ட ஐந்து கப்பல்கள் சீனாவின் மஞ்சள் கடலில் நங்கூரமிட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் இந்த அளவு இருமடங்காக அதிகரித்துள்ளது.
பொதுவாக இந்த வகை எண்ணெயை சீனா வாங்குவதில்லை என்றாலும், ரஷ்யா தற்போது புதிய வாடிக்கையாளர்களைத் தேடி வருகிறது. இந்தியாவின் தினசரி எண்ணெய் இறக்குமதி 20 லட்சத்திலிருந்து 8 லட்சமாக சரிந்துள்ளதே ரஷ்யாவின் இந்த புதிய வியூகத்திற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.