சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி ஒன்றிய அரசின் தோல்வியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அதிரடி போராட்டம்
March 15, 2026

மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கையாளத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோவையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வீதிக்கு வந்து முழக்கமிட்டனர்.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு ‘தோல்வி மாதிரி’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தொலைநோக்கு பார்வையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் கோபத்தை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.