சிறையில் இம்ரான் கானை சந்தித்த சகோதரி எப்படி இருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
December 2, 2025

அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மா கானுக்கு இறுதியாக அனுமதி கிடைத்தது. பாகிஸ்தான் செய்தி நிறுவனமான தி டான் வெளியிட்டுள்ள தகவலின்படி, செவ்வாய்க்கிழமை மாலை உஸ்மா, பிடிஐ ஆதரவாளர்கள் சிலருடன் இம்ரான் கானை சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இம்ரானுடன் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சந்திப்பு குறித்து உஸ்மா கான் விரைவில் செய்தியாளர்களிடம் பேசுவார் எனத் தெரிகிறது. அவர் அளிக்கும் பேட்டியில், சிறையில் உள்ள முன்னாள் பிரதமரின் உடல்நிலை மற்றும் பிற சூழ்நிலைகள் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பானது பிடிஐ ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.